Take a fresh look at your lifestyle.

’பெருசு’ – விமர்சனம்

10

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தநாடு பகுதியில் ஊர் மதிக்க கூடிய பெரியவர் ஹாலாசியம் இவரின் மனைவி தனம். இவர்களுக்கு சுனில் மற்றும் வைபவ் இரு மகன்கள் இருக்கிறார்கள். சுனிலின் மனைவியாக சாந்தினியும் வைபவின் மனைவியாக நிஹாரிகாவும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு நாள் ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்து டிவி பார்க்கும் பெரியவர் ஹாலாசியம் திடீரென்று இறந்து விடுகிறார். பெரியவரின் இறப்பினால் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனை ஊரில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்தால் மானம் மரியாதை போய்விடும் என்று குடும்பத்தினர் அச்சப்படுகிறார்கள்.

முடிவில் இறந்து போன  பெரியவர் ஹாலாசியத்திற்கு வந்த பிரச்சனை என்ன? வைபவ் மற்றும் சுனில் இருவரும் பிரச்னையை தீர்த்து தந்தையின் உடலை அடக்கம் செய்தார்களா? இல்லையா? என்பதே ’பெருசு’ படத்தின் கதை.

மது போதையில் இருக்கும் கதாபாத்திரத்தில்  இயல்பாக  நடித்திருக்கும் வைபவ், அண்ணன் கதாபாத்திரத்தில் எதார்த்தமாக நடித்திருக்கும்  சுனில்,படம் முழுவதும் பிணமாக அப்பாவாக நடிக்கும் அலெக்சிஸ்,  அம்மாவாக நடிக்கும் தனம் ,தீபா ,சுனிலின் மனைவியாக நடித்திருக்கும் சாந்தினி .வைபவின் மனைவியாக நடித்திருக்கும் நிஹாரிகா, பாலசரவணன், முனீஷ்காந்த் .ரெடிங் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் ,கஜராஜ், சுவாமிநாதன், கருணாகரன் என அனைவரும் நடிப்பில் திரைக் கதைக்கு  பக்க பலம் .

இசையமைப்பாளர் அருண் ராஜின் இசையும், ஒளிப்பதிவாளர் சத்யா திலகத்தின் ஒளிப்பதிவும்  படத்திற்கு பக்க பலம் .

அடல்ட் காமெடி கதையாக இருந்தாலும் விரசமில்லாத  முழுக்க நகைச் சுவையான வசனங்களுடன்  திறமையாக படத்தை இயக்கியுள்ளார்  இளங்கோ ராம் 
ரேட்டிங்- 3  / 5