காளி பட்டிணத்தை சேர்ந்த பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான லால், அவரது பண்ணை கடற்கரை வீட்டில் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார்.
கொலை வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாக வரும் சப்-இன்ஸ்பெக்டர் கதிர், காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுடன் இணைந்து விசாரணையை தொடங்குகிறார்.
அப்போது லால் கொலை செய்யப்பட்ட வீட்டில், வெளியே தாழிடப்பட்ட மர அலமாரிக்குள் கையில் துப்பாக்கியுடன் கெளரி கிஷன் இருக்கிறார். அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டாலும், அவரிடம் இருந்து எந்தவித தகவலையும் பெற முடியாததோடு,
கொலை செய்துவிட்டு அலமாரியில் ஒளிந்துக் கொண்டால் வெளியே எப்படி தாழிட முடியும், என்பதாலும் கதிர் மற்றும் சரவணன் தலைமையிலான போலீஸ் குழு குழப்பமடைகிறது.
ஒரு கட்டத்தில் மாவட்டத்தின் வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்கறிஞர் லாலை கொலை செய்ததாக 7 இளம் பெண்கள் சரணடைவதோடு, அவர்கள் அனைவரும் கொலை குறித்து ஒரே மாதிரியான வாக்கு முலத்தை கதிர் மற்றும் சரவணன் தலைமையிலான போலீஸ் குழுவிடம் சொல்கிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்ட கெளரி கிஷனுடன் சேர்த்து மொத்தம் 8 பெண்கள் ஒரு கொலை வழக்கில் சரணடைந்தாலும், அவர்கள் அனைவருக்கும் ஒருவருக்கொருவர் எந்தவித தொடர்பும் இல்லாததும், அவர்களின் பின்னணி குறித்த எந்தவித தகவல்களும் கிடைக்காததால் குழப்பத்தின் உச்சத்தில் போலீசார் இருக்கின்றனர். இதன் பின் போலீசில் சரணடைந்த 7 பெண்களுடன் குற்றம் சாட்டப்பட்ட கெளரி கிஷனும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும் பெண்கள் சிறைச்சாலையில் அடைக்கப்படுகின்றனர் . ஐஸ்வர்யா ராஜேஷ் .இந்த கொலைக்கான உண்மையான பின்னணியை தெரிந்து கொள்ள அவர்களுடன் கைதியாக உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் உதவியை கேட்கிறார் விசாரணை அதிகாரி கதிர்.
முடிவில் ஐஸ்வர்யா ராஜேஷின் உதவியால் கொலைக்கான பின்னணியை கதிர் கண்டுப்பிடித்தாரா? வழக்கறிஞர் லாலை கொலை செய்த மர்மமான கொலை குற்றவாளியை கதிர் கண்டுபிடித்து கைது செய்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் இணைய தொடர்தான் ‘சுழல் 2’.
சுழல் முதல் பாகத்தில் தன்சொந்த சித்தப்பாவான குமாரவேலால் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் சப் இன்ஸ்பெக்டர் கதிரின் துப்பாக்கியால் சுட்டு கொல்வதுபோல் சுழல் முதல் பாகம் முடிவடைகிறது .
இதன் தொடர்ச்சியாக சுழல் இரண்டாம் பாகத்தில் சட்டையூரில் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் கொலை குற்றவாளியான ஐஸ்வர்யா ராஜேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார் .
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கொலை வழக்கை காளி பட்டினத்தை சேர்ந்த பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான வழக்கறிஞர் லால் ஐஸ்வர்யா ராஜேஷ் கொலை வழக்கிலிருந்து விடுதலையாக அவருக்காக வாதாடுகிறார் .
அதன் பின் சுழல் இரண்டாம் பாகத்தில் நடிகர் லாலின் கொலையை மையமாக வைத்து இந்த தொடரின் கதை ஆரம்பமாகிறது .,
கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் , சப்-இன்ஸ்பெக்டராக கதிர் வழக்கறிஞராக லால் , போலீஸ் இன்ஸ்பெக்டராக இயல்பாக நடிக்கும் சரவணன் , கொலை வழக்கில் சரணடையும் இளம் பெண்களாக கெளரி கிஷன் ,சம்யுக்தா விசுவநாதன்,மோனிஷா பிளஸ்சி, ஷிரிஷா,அபிராமி போஸ்,நிகிலா சங்கர் ,ரினி ,கலைவாணி பாஸ்கர் மற்றும் சாந்தினி தமிழரசன் ,அஸ்வினி நம்பியார் என அனைவருமே திரைக்கதைக்கு பக்க பலமாக உள்ளனர் .
ஒளிப்பதிவாளர் ஆபிரகாம் ஜோசப் ஒளிப்பதிவும் , சாம்.சி.எஸ் இசையும் தொடருக்கு பக்க பலம்.
புஷ்கர் – காயத்ரி கதை, திரைக்கதையுடன், பிரம்மா மற்றும் சர்ஜுன்.கே.எம் இருவரும் சுவாரஸ்யமாக எதிர்பாராத திருப்பங்களுடன் 8 எபிசோட்களையும் அனைத்து தரப்பினரும் பார்க்ககூடிய விதத்தில் சஸ்பென்ஸ் கலந்த விறு விறுப்பான தொடராக இயக்கியுள்ளனர்.
ரேட்டிங் – 3.5 / 5