Take a fresh look at your lifestyle.

அதிதி ஷங்கர் எனக்கு பெஸ்ட் கோ-ஸ்டார்-நடிகர் ஆகாஷ் முரளி!

12

“ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’ திரைப்படம்” – நடிகர் ஆகாஷ் முரளி!

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளியின் முதல் திரைப்படமான ‘நேசிப்பாயா’ ஜனவரி 14, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைத் தெரிந்து கொள்ள நடிகர் ஆகாஷ் முரளி ஆர்வமாக இருக்கிறார்.

படம் வெளியாவது பற்றி தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார் ஆகாஷ் முரளி, “எனக்கு பயம் இருக்கவே செய்கிறது. படம் பார்த்துவிட்டு பார்வையாளர்களும் விமர்சகர்களும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதுவரை வெளியான படத்தின் விஷூவல் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது. படத்திற்கும் அதே போன்ற பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

படத்தின் ட்ரெய்லரில் திறமையான நடிகர்கள் மற்றும் பிரமாண்ட தயாரிப்பு போன்றவை மூலம் இதன் கதை என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. “படத்தின் கதை எளிமையானது. ஆனால், அதன் உணர்வுகள் மிகவும் ஆழமானது. ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’” என்கிறார் ஆகாஷ் முரளி.

மேலும் அவர் கூறியதாவது, “பாலிவுட்டிலும் தனது முத்திரையை பதித்த இயக்குநர் விஷ்ணுவர்தன் சாருடன் பணிபுரிந்தது எனக்கு சிறந்த அனுபவமாக அமைந்தது. அதிதியும் எனக்கு பெஸ்ட் கோ-ஸ்டார். நடிப்பில் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார். கல்கி கோச்லினும் சிறப்பாக நடித்துள்ளார். எனது முதல் படத்திலேயே நடிகர்கள் பிரபு சார், சரத்குமார் சார், குஷ்பு மேடம் என சிறுவயதில் யாருடைய படங்களை நான் பார்த்து வளர்ந்தேனோ அவர்களுடன் நடித்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

இந்தப் படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்க சினேகா பிரிட்டோ இணைந்து தயாரித்துள்ளார்.

தொழில்நுட்ப குழு:
இசை: யுவன் ஷங்கர் ராஜா,
ஒளிப்பதிவு: கேமரூன் எரிக் பிரிசன்,
படத்தொகுப்பு: அ.ஸ்ரீகர் பிரசாத்,
தயாரிப்பு வடிவமைப்பு : சரவணன் வசந்த்,
பாடலாசிரியர்கள் : பா.விஜய், விக்னேஷ் சிவன், ஆதேஷ் கிருஷ்ணா,
நடனம் : தினேஷ்
சவுண்ட் டிசைன் & மிக்ஸ் : தபஸ் நாயக்
ஆடை வடிவமைப்பாளர் : அனு வர்தன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்