Take a fresh look at your lifestyle.

Heartin Movie Review

14

கிஷோர் குமார் இயக்கத்தில் சனத், மடோனா, இமயா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் Able ஹார்ட்டின்.

கதை

சனத் வட இந்தியாவில் (ஜெய்ப்பூர்) தமிழ் உணவுகளை கொடுக்கும் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார், அங்கு வரும் சாதனாவுடன் (இமயா) பேசி, பழகி காதல் வரைக்கும் வர, சனத் அந்த காதலுக்குள் போக அஞ்சுகிறார்.
அதன் பின் ஏன் காதல் வேண்டாம் என தன் கல்லூரி காதல் பற்றி சொல்கிறார், மடோனா செபாஸ்டியன், சனத் இருவரும் 3 வருடமாக காதலிக்கின்றனர், ஆனால், கல்லூரி முடிந்த பின் மடோனாவிற்கு இந்த காதல் செட் ஆகாது என முடிவெடுத்து தன் சொந்த ஊருக்கு 10 நாள் செல்கிறார்.
10 நாள் மடோனா பேசாமல் இருக்க சனத் தன் நண்பருடன் மடோனாவை பார்க்க ஊட்டி செல்ல அங்கு சிறு ஆக்சிடண்ட் ஆகிறது, ஆனால், அதையும் தாண்டி மடோனாவை சந்திக்க, இருவரும் பேசி பிரிகின்றனர்.
சனத் இந்த கதையை சொல்லி முடிக்க, சாதனாவுக்கு இன்னும் தான் சனத் மீது காதல் வர பிறகு எப்படியோ அந்த காதல் திருமணம் வரை செல்ல, அந்த நேரத்தில் சனத்திற்கு ஏற்படும் ஆக்சிடண்ட் அவரின் நினைவுகளை அழித்து, மடோனாவை ப்ரேக் அப் செய்த முந்தைய நாளுக்கு செல்ல, தான் இன்னும் மடோனாவை காதலிப்பதாகவும், சாதனாவை யார் என தெரியவில்லை என சொல்ல பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

சனத் சிவாவாக காதல் தோல்வி இறுகிய முகம், சாதனாவுடன் பிடிகொடுக்கு பேசாமல் பிறகு காதலை சொல்லுமிடம், தன் நினைவுகள் இழந்து அவர் செய்யும் வேலைகள் என அனைத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்
சாதனாவாக நடித்துள்ள இமாயா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், மடோனாவும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
வாட்ஸப் மணி, டெப்நிதா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
முகேஸ்வரனின் ஒளிப்பதிவும் ராஜேஷ் முருகனின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்திற்கு பெரிய பலம்.

இயக்குநர் கிஷோர்குமார் கதையை பீல்குட்டாக சொன்னவர் இன்னும் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம். பாராட்டுக்கள்.

மதிப்பெண் 3/5