Take a fresh look at your lifestyle.

Con City Movie Review

8

Con City Movie Review

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் அன்னா பென், யோகிபாபு, வடிவுக்கரசி, இமான் அண்ணச்சி, ராதாரவி மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ள படம் கான் சிட்டி.

கதை

மின்சார வாரிய அலுவலகத்தில் பணபுரியும் அர்ஜூன்தாஸ் வீட்டுக்கடன், மற்றும் சில கடன் பிரச்சனைகளால் சிரமப்பட்டு வரும் சூழ்நிலையில் மக்கள் கட்டும் கரண்ட்பில் பணத்தை விரைவாக பணம் சம்பாதிக்கும் திட்டத்தில் தன் நண்பர் சொன்ன பேச்சை நம்பி முதலீடு செய்து லாபம் சம்பாதித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அன்னா பென் சம்பாதித்த பணத்தையும் வடிவுக்கரசி யோகிபாபுவிடம் உள்ள பணத்தையும் அதிக வட்டிக்கு ஆசைபட்டு அர்ஜூன்தாஸிடம் கொடுக்கிறார்கள். எல்லோரிடமும் வாங்கிய பணத்தை அர்ஜூன்தாஸ் தன் தண்பன் இரண்டுநாளில் அதிக லாபம் தருவதாக சொன்னதை நம்பி அவரிடம் கொடுக்கிறார். நண்பனோ திடீரென இறந்து போக போலிஸிடம் மாட்டிக்கொள்கின்றனர் அர்ஜூன்தாஸ், அன்னா பென், வடிவுக்கரசி, யோகிபாபு. ஒரு கட்டத்தில் போலிஸிடமிருந்துஅவர்கள் தப்பிக்க அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

அர்ஜுன் தாஸ் தனது வழக்கமான கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அன்னா பென் நாயகியாகவும், விடிவி கணேஷ் மின்சார வாரிய அதிகாரியாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, அருள்தாஸ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நகைச்சுவையுடனும் உணர்வுபூர்வமாகவும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இரண்டாம் பாதியை சுவாராஸ்யமாக சொன்னவர் முதல் பாதியையும் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம். பாராட்டுக்கள்.

மதிப்பெண் 2.5/5