Take a fresh look at your lifestyle.

அனந்தன் காடு திரை விமர்சனம்

5

எஸ். வினோத்குமார் தயாரிப்பில்
ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில்
ஆர்யா, நிகில விமல், ரெஜினா, சுனில் இந்திரன்ஸ், சித்திக், அஜய், போஸ் வெங்கட், தேவ் மோகன், ரெஞ்ஜி பணிக்கர் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் அனந்தன் காடு.

கதை

இலங்கை போராளி வெற்றிவேல் முருகன் (ஆர்யா ) இலங்கை படையிடமிருந்துபோஸ் வெங்கட் உதவியுடன் தப்பி இந்தியா வருகிறார் அவருக்கு கேரளாவில் ஒரு போஸ் வெங்கட்டுக்கு தெரிந்த சிறு ரவுடி கூட்டம் அடைக்கலம் தருகிறது. தனக்கு பிடிக்காதவர்களை இந்த ரவுடி கூட்டத்தை வைத்து போட்டு தள்கிறார் அம்மாநில முதல்வர் ஒரு கட்டத்தில் இவர்கள் கொலை செய்த பிரசசினை இந்த பிரச்னை சிபிஐ வரை செல்கிறது. சிபிஐயிடம் ரவுடி கூட்டம் பிடிபட்டால் தன் குட்டு அம்பலமாகிவிடும் என்று எண்ணி முதல்வர் அந்த ரவுடி கூட்டத்தை போலீசை வைத்து என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார். அந்த ரவுடி கூட்டம் பாதிக்கப்படும்போது அவர்களிடம் அடைக்கலமாக இருந்த வெற்றிவேல் முருகன் ( ஆர்யா) போலீசையும் மற்றும் முதல்வர் அடியாட்களையும் எதிர்த்து எப்படி தாக்குதல் நடத்துகிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை

ஆர்யா ஒரு போராளியாக நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.
கருப்பு படத்தில் அப்பாவியாக நடித்த இந்திரன்ஸ் இந்த படத்தில் ரவுடியாக சிறப்பாக நடித்திருக்கிறார். போஸ் வெங்கட், நிகிலா விமல், ரெஜினா என இதில் நடித்த நடிகர்களும் தங்களது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.. சுனில் தெலுங்கு பேசும் ரவுடி போலீசாக மிரட்டலாக நடித்துள்ளார்.
எஸ். யுவாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பி. அஜனிஷ் லோக்நாத் இசை ரசிக்கவைக்கிறது.

உண்மைச் சம்பவங்களின் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள “அனந்தன் காடு”, அரசியல் அதிகாரம், காவல்துறை ஆதிக்கம் மற்றும் சாதாரண மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் அதிகார விளையாட்டுகளை மையமாகக் கொண்ட கதையை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ள இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமாருக்கு பாராட்டுக்கள்.

மதிப்பெண் 3/5