ஏ.சி.எஸ் அருண்குமார், குஷ்புவின் ஆவ்னி ஸ்டூடியோஸ் தயாரிப்பில்
அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேசன், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன், விடிவி கணேஷ் பகவதி பெருமாள், விச்சு விஸ்வநாத், போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் Double Occupancy.
கதை
போஸ் வெங்கட் வினோதினி தம்பதியருக்கு
இறைவன் அருளால் பிறக்கும் குழந்தை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் மாறும் தன்மை கொண்டதாக உள்ளது. இருவருக்கும் உடல் மட்டும் தான் பொதுவானது என்பதை விட இதயம் மட்டும் தான் பொதுவானது. இப்படி இருக்க பகலில் பெண்ணாக இருக்கும் ரேஷ்மா வெங்கடேசன் வினோத் கிஷனை காதலிக்க இரவில் ஆணாக இருக்கும் சந்தோஷ் சம்யுக்தா விஸ்வநாதனை காதலிக்க இப்படி சென்றிருக்கும் கதையில் அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை சுவாராஸ்யமாய் சொல்லியிருப்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகர்களாக சந்தோஷ், வினோத் கிஷன் கதாநாயகிகளாக ரேஷ்மா வெங்கடேசன், சம்யுக்தா விஸ்வநாதன் இவர்கள் நால்வரும் சிறப்பாக நடித்துள்ளனர். காமெடியனாக விடிவி கணேஷ் சிரிக்க வைக்கிறார்.
பகவதி பெருமாள், விச்சு விஸ்வநாத், போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
சாம் C எஸ்ஸின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
சாந்தகுமார் சக்ரவர்த்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
ஜனரஞ்சகமான படத்திற்கு ஏற்ற வித்தியாசமான கதையை எடுத்துக்கொண்ட இயக்குநர் முதல் பாதியை கலகலப்பாக கொண்டு சென்றவர் இரண்டாம் பாதி திரைக்கதையையும் இன்னும் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம். இயக்குநருக்கு பாராட்டுக்கள்.