Take a fresh look at your lifestyle.

சாருகேசி திரை விமர்சனம்

8

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் YG மகேந்திரன், சுஹாசினி, தலைவாசல் விஜய், ராஜ் அய்யப்பா,ரம்யா பாண்டியன், சத்யராஜ், சமுத்திரக்கனி, மதுவந்தி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் சாருகேசி.

கதை

கர்நாடக இசை உலகில் புகழ்பெற்ற பாடகராக விளங்கும் YG மகேந்திரன், சுஹாசினி மகன் ராஜ் அய்யப்பாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அப்பாவை புரிந்து கொள்ளாமல் ராஜ் அய்யப்பா அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தம் அளவுக்கு நடந்து கொள்கிறார். ராஜ் அய்யப்பாவுககு மனைவயாக வரும் ரம்யா பண்டியனும் YG மகேந்திரனையும் சுஹாசினியையும் அவமானப்படுத்துகிறார். மகன் அப்பாவை புரிந்துகொண்டானா? ரம்யா பாண்டியன் அசிங்கப்படுத்த காரணம் என்ன?
குடும்பத்திற்குள் ஏற்பட்ட மனக்காயங்களை இசை எவ்வாறு இணைக்கிறது என்பதை சொல்வதே படத்தின் மீதிக்கதை.

ஓய் ஜி மகேந்திரன் தனது அனுபவ நடிப்பால் சிறப்பாக நடித்து கைதட்டல் பெறுகிறார். அவரது மனைவியாக சுஹாசினி சிறப்பாக நடித்துள்ளார். அவரது மகனாக ராஜ் அய்யப்பா மருமகளாக ரம்யா பாண்டியன் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நண்பனாக தலைவாசல் விஜய், ராகதேவனாக சத்யராஜ், இயக்குநராக சமுத்திரகனி, மற்றும் மதுவந்தி, தீனா, பிரித்திகா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
தேனிசை தென்றல் தேவாவின் இசை படத்திற்கு உயிர்கொடுத்திருக்கிறது. சஞ்சய் பி. எல்லின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பா. விஜய்யின் பாடல்களும் வசனமும் அருமை.

வெங்கட்டின்
ஒரு இசை பாடகரின் வாழ்க்கைப் பதிவு
கதையை நாடகமாக பாராட்டுப்பெற்ற கதையை சாருகேசி திரைப்படமாக எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக கொடுத்துள்ள இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு பாராட்டுக்கள்.

மதிப்பெண் 4/5