Take a fresh look at your lifestyle.

ஹபீபி திரைவிமர்சனம்

11

மீரா கதிரவன் இயக்கத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஹபீபி

நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார் . ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

கதை

1980 களில் திருநெல்வேலி மாவட்ட கிராமப் பிண்ணனியில் விசைத்தறி நெசவுத் தொழிலின் வாழாவாதாரத்தலக்கொண்ட :ஒரு முஸ்லீம் குடும்பததின் வாழ்க்கை, அவர்களின் உறவுகள், கனவுகள், போராட்டங்கள் மற்றும் காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்.

கஸ்தூரிராஜா தனது மனைவி தம்பி, மகன் என குடும்பத்தோடு விசைத்தறி தொழிலை செய்து குடும்பம் நடத்துகிறார். இவர் ஊரில் உள்ள அனைவருமே இந்த தொழிலை செய்து வருகின்றனர். இந்த தொழிலின் வருமானம் பத்தாமல் பல பேர் பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்கின்றனர். கஸ்தூரிராஜா தம்பியும் கல்யாணம் ஆனபிறகு வெளிநாடு செல்கிறார். மகன் ஈசி மாளவிகா மனோஜ்மீது காதல் கொள்கிறார். மாளவிகா மனோஜ்ஜும் காதல் செய்கிறார். இவர்கள் நேரில் சந்திக்கும்போது பிரச்சினை ஏற்படுகிறது. இதன் பிறகு ஈசா மாளவிகா மனோஜ் காதல் நிறைவேறியதா? இல்லையா? கஸ்தூரிராஜாவின் குடும்பம் என்னவாயிற்று? என்பதை வாழ்க்கையின் எதார்த்தததை கவிதையாக எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருப்பதே படத்தின் மீதிக்கதை.

குடும்பத் தலைவனாக நடித்த இயக்குனர் கஸ்தூரிராஜா நடித்திருக்கிறார் என்பதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.மகனாக நடித்த ஈசா கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். ஈசா காதலியாக மாளவிகா மனோஜ் சிறப்பாக நடித்துள்ளார்.சித்தி கேரக்டரில் நடித்த அனஸ்வரா, தனாsri, அனூஸ்ரியா ராஜன், ஜெயsri பினுராஜ், அருள்குமார், ரேகாகுமணன், கஸ்மத்பானு, மாஸ்டர் தீரன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்துசிறப்பாக நடித்துள்ளனர்.
மகேஷ்முத்துசாமியின் ஒளிப்பதிவும், சாம் சி எஸ் இசை, பாடல்களும் படத்திற்கு பெரிய பலம்.

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒர் தரமான, நேர்மையான படைப்பு. இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை முறை, அவர்களின் பாசம், தியாகம், காதலை இப்படி எந்த தமிழ் படமும் காண்பித்தது இல்லை. இந்த படம் பார்ப்பவர் பல இடங்களில் கண் கலங்காமல் இருக்க முடியாது. நல்ல படத்தை கொடுத்த இயக்குனர் மீரா கதிரவனுக்கும் படக்குழுவுக்கும் வாழ்த்துகள்

மதிப்பெண் 4/5