Take a fresh look at your lifestyle.

சம்ஹாரம் திரைவிமர்சனம்

8

வித்யா புரடக்ஷன் வேல்முருகன் தயாரிப்பில் ராம் பிரபா இயக்கத்தில் பிரஜின் பத்மநாபன் ஷருமிஷா,
நியா வர்கீஸ்
கணேஷ் சாவரட்டில்
ராஜ்குமார்,
தென்றல் ராஜா, ராம் பிரபா மற்றும் பலர் நடித்து ஜுன் 5 ல் வெளியாகும் படம் சம்ஹாரம்.

கதை

பிரஜன் ஒரு அண்ணனாக தன் பெரிய தங்கைக்கு ஒரு திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்கிறார். அந்தத் திருமணம் மீது விருப்பமில்லாத அவரது தங்கை தான் காதலிப்பதாக சொல்ல அதை பிரஜன் ஏற்க மறுக்க அவர் இறந்து விடுகிறார். சில நாட்களுக்குபின் அதே மாப்பிள்ளைக்கு தனது இரண்டாவது தங்கையை திருமணம் செய்து வைக்க முடிவுசெய்கிறார். இந்த திருமணத்தில் தங்கை ஒருவரை காதலித்துக்கொண்டிருக்க அவரை தன் வீட்டிற்கு வர சொல்கிறார் மாப்பிள்ளையை கொலை செய்ய. அவர்கள் மாப்பிள்ளையை கொலை செய்தார்களா? பிரஜன் என்ன செய்தார்? என்பதே படத்தின் திரைக்கதை

பிரஜன் அண்ணனாக கணவனாக நடிப்பில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார்.
அவரின் தங்கையாக வரும் சர்மிஷா சிறப்பாக நடித்துள்ளார். கணேஷ் சாவரட்டில் வில்லன் ரோலைச் சரியாகச் செய்துள்ளார். நியா வர்கீஸ், ராஜ்குமார், தென்றால் ராஜா, ராம் பிரபா என இதில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்
V G ஹரி கிருஷ்ணன் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் பரவாயில்லை ரகம். சுரேஷ்குமார் சுந்தரத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

ஒரே இரவில் நடக்கும் கதை என்றாலும், அதை மிகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ராம் பிரபா. பாராட்டுக்கள்.

மக்கள் தொடர்பு : சரண்