Take a fresh look at your lifestyle.

29 திரைப்பட விமர்சனம்

23

29 திரைப்பட விமர்சனம்

கார்த்திகேயன் சந்தானம் & லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் 29

கதை

விது அம்மா செய்யும் நல்ல காரியம் பிடிக்காமல் சேலத்திலிருந்து சென்னை வந்து வேலை செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் ப்ரித்தி அஸ்ராணியுடன் நட்பாக பழகி பின்பு காதலாக மாறுகிறது. ப்ரித்தி அஸ்ராணிக்கு ஐஏஎஸ் ஆகவேண்டும் என்பது லட்சியம். அதற்காக ப்ரித்தி அஸ்ராணி விதுவுக்கு, காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை, அதை தாண்டிய ஒரு வாழ்க்கையும், அதில் சாதிக்க வேண்டியதும் அவசியம் உள்ளது என்பதை புரிய வைக்க முயற்சிக்கிறார். ஆனால், அது முடியாமல் போக அவர் தனது காதலை முறித்துக்கொண்டு அம்மாவுடன் வெளியூரில் படிக்க செல்கிறார்.
தனக்கான அடையாளமாக நினைத்த காதலும், காதலியும் கைவிட்டு போன பிறகு, மீண்டும் தன் அடையாளத்தை தேடி பயணிக்கும் விதுவின் வாழ்க்கை என்ன ஆனது ?, கைவிட்டு சென்ற காதலியுடன் மீண்டும் இணைந்தாரா? இல்லையா ?, என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக விது சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக ப்ரித்தி அஸ்ராணி கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து கைதட்டல் பெறுகிறார்.
நாயகனின் நண்பராக நடித்துள்ள அவினாஸ், வில்லனாக மாஸ்டர் மகேந்திரன், ஆதிரா பாண்டியலக்‌ஷ்மி, சிந்து ஷியாம்
என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

இயக்குநர் ரத்னகுமார் காதலை மிகவும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்
சொல்லவந்த கதையை இன்னும் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம். பாராட்டுக்கள்.