Take a fresh look at your lifestyle.

கரா திரைவிமர்சனம்

8

வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில்.
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதாபைஜூ, கருணாஸ், ஜெயராம் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் கரா.

கதை

1990 ஆம் வருடம் திருவெறும்பூர் ஊரில் இருக்கும் எம்.எல்.ஏ வீட்டில் கொள்ளை அடிக்க செல்கிறார் நாயகன் தனுஷ்சும் மைத்துனர் பிரித்வி பாண்டியராஜனும் செல்கிறார்கள். தன்னுடைய கடைசி திருட்டு என்று முடிவு செய்து கொள்ளை அடிக்கிறார்கள். எதிர்பாராத விதமாக தனுஷ் சிக்கி கொள்ள, பிரித்வி பாண்டியராஜ் தப்பித்து விடுகிறார்.
போலீஸ் அதிகாரியாக இருக்கும் சுராஜ், தனக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்று திட்டம் போட்டு, தனுஷை பல வழக்குகளில் சிக்க வைக்க முயற்சி செய்கிறார்.
இதையறிந்த தனுஷ், போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பித்து செல்கிறார்.
6 மாதங்கள் கழித்து ரேணிகுண்டாவில் திருட்டு தொழிலை விட்டு, மனைவி மமிதா பைஜூ உடன் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். மனைவி கஷ்டப்படுவதை பார்த்து
சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று முடிவு செய்து சொந்த ஊரான இராமநாதபுரத்திற்கு செல்கிறார். அங்கு தந்தை கே.எஸ்.ரவிக்குமாரை சந்தித்து நிலத்தை விற்று பணம் தருமாறு கேட்கிறார்.
நிலம், வங்கியில் அடமானத்தில் இருப்பதாக தந்தை சொல்ல அதிர்ச்சி அடைகிறார். பணத்திற்கு என்ன செய்வது என்று தனுஷ் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் நிலத்திற்கும் டிராக்டர்க்கும் வங்கியில் கடன் கட்டாததால் ஜப்தி செய்ய நோட்டீஸ் வருகிறது. இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் இறந்து விடுகிறார். அவரது சடலத்தை வங்கி அதிகாரிகள் அடக்கம் செய்ய நிலம் கொடுக்க மறுக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் நிலத்தை மீட்டு தந்தையின் உடலை அடக்கம் செய்ய கடன் கொடுத்த கிளைகள் வங்கியிலே கொள்ளை அடிக்க முடிவு செய்கிறார்.
இறுதியில் தனுஷ், வங்கியில் கொள்ளை அடித்து நிலத்தை மீட்டாரா? தந்தை உடலை அடக்கம் அவரது நிலத்தில் செய்தாரா? போலீசிடம் சிக்கினாரா? இல்வையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக தனுஷ் கரசாமியாக நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக மமிதாபைஜூ சிறப்பாக நடித்துள்ளார். தனுஷ் தந்தையாக கே எஸ் ரவிக்குமார் சிறப்பாக நடித்துள்ளார். போலிஸ் அதிகாரியாக சுராஜ் நடிப்பு மிரட்டல். பிரித்வி பாண்டியராஜ் நடிப்பும் அருமை.
ஜெயராம், கருணாஸ் என இதில் நடித்திருக்கும் அனைவரூம் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். GV பிரகாஷ் இசை படத்திற்கு பெரிய பலம்.

சாமானிய மக்கள் வங்கியில் கடன் வாங்கிக்கொண்டு அவதிப்படுவதை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. பாராட்டுக்கள்.

மதிப்பெண் 4.5/5