Take a fresh look at your lifestyle.

ரூம் பாய் திரைவிமர்சனம்

5

சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிப்பில்
ஜெகன் ராயன் இயக்கத்தில்
நிகில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண் ராஜா, பிரபாகர் கேரளா பெ ஹமின், மும்பை மாடல் அழகி நிதி மரலி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ரூம் பாய்.

கதை

கூர்நோக்கு மையத்தில் படித்து முடித்து வெளியேறும் நாயகன் நிகில், ஏலகிரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் ரூம் பாயாக வேலைக்கு சேருகிறார். அங்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட பல மோசடிகளை கண்டுபிடிக்கும் நிகில், அதற்கான ஆதாரங்களை கைப்பற்றுவதோடு விடுதியின் மேலாளரை கொடூரமாக கொலை செய்கிறார். இதனால், அவரை வில்லன் கும்பல் தேட, மறுபக்கம் கூர்நோக்கு மையத்தின் காப்பாளர் மாயமான வழக்கு தொடர்பாக போலீஸும் நிகிலை தேடுகிறது.
இவர்களிடம் சிக்காமல் தப்பித்தாலும், அந்த சொகுசு விடுதியை சுற்றி சுற்றி வரும் நிகில் யார் ?, அவருக்கும் அந்த சொகுசு விடுதி மற்றும் கூர்நோக்கு மையத்தின் காப்பாளர் மாயமானதற்கும் இருக்கும் தொடர்பு என்ன ? என்பதை பல திருப்பங்களோடு சொல்லியிருப்பதுதான் ரூம் பாய் படத்தின் கதை.

கதாநாயகனாக நிகில் நடிப்பிலும் நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் நன்றாகவே நடித்துள்ளார்.
கதாநாயகியாக ஹர்ஷா நடிப்பும் அருமை. இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண் ராஜா, பிரபாகர் கேரளா பெ ஹமின், மும்பை மாடல் அழகி நிதி மரலி என் இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்நிரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
வேலன் சகாதேவனின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.
சி.பாரதி ராஜனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் கதையை பரபரப்பாக ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜெகன் ராயன். வாழ்த்துக்கள்.