Take a fresh look at your lifestyle.

மிஸ்டர் எக்ஸ் திரைவிமர்சனம்

10

மிஸ்டர் எக்ஸ் திரைவிமர்சனம்

Shri Vineet Jain – S Lakshman தயாரிப்பில்
மனு ஆனந்த் இபக்கத்தில் ஆர்யா, கெளதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா வில்சன், அதுல்யா, ஜெயபிரகாஷ், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்து வெளியாகியருக்கும் படம் மிஸ்டர் எக்ஸ்.

கதை

ரஷ்யாவில் வெடிக்க தயாராக இருக்கும் அணு ஆயுதத்தை கண்டுபிடிக்க இந்திய ரகசிய முகவர்களான ஆர்யா குழுவை அனுப்புகின்றனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைகிறது. முடிவில் அந்த அணு ஆயுதத்தை ஆர்யா குழு செயலிழக்கச் செய்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் சுவாராஸ்யமான படத்தின் மீதிக்கதை.

இந்திய ரகசிய முகவரா ஆர்யா நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். வில்லனாக கௌதம் கார்த்திக் நடிப்பு மிரட்டல். சரத்குமார் நடிப்பும் அருமை. மஞ்சுவாரியர், அனகா, ரைசா வில்சன், அதுல்யா, ஜெயப்பிரகாஷ், காளிவெங்கட் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் அவரவர்களும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
டிபு நினன் தாமஸின் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்திற்கு பலம்.
அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

Mr. X’ படம் ஒரு சர்வதேச ஸ்பை திரில்லராக எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக கொடுத்திருக்கும் இயக்குநர் மனு ஆனந்த்க்கு வாழ்த்துக்கள்.

மதிப்பெண் 4.5/5