இயக்குநர் கேந்திரன் முனியசாமி இயக்கத்தில் விமல், சனஸ்கா, பால சரவணன், முனீஸ்காந்த், நட்டி நடராஜ் ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் வடம்.
கதை
படத்தின் ஆரம்பத்திலேயே நட்ராஜ் வீட்டில் இரண்டு காளை கண்ணு பிறக்கிறது. அதை மஞ்சு விரட்டுக்கு தயார் செய்யும் போது இரண்டுமே அதற்கு ஏற்றது இல்லை என நினைத்து ஒன்றை தன் மச்சினிச்சுக்கும், மற்றொன்றை அடிமாட்டுக்கும் விற்கிறார்.
அந்த நேரத்தில் எப்போதும் ஊருக்கும், மாடுகளுக்கு கூட நல்லது நினைக்கும் நரேன் அந்த கன்றை காப்பாற்றி தன் வீட்டில் வளர்க்கிறார். அந்த மாட்டை மஞ்சு விரட்டுக்கு நரேனின் மகனான விமல் தயார் செய்து பல வெற்றிகளை பெறுகிறார்.
அதே நேரத்தில் திருவிழாவில் தன் தந்தையிடம் தகறாரு செய்த ஊர் பெரியவர் ஒருவரின் வேட்டியை விமல் அவிழ்த்து அவமானப்படுத்துகிறார். இதனால் விமலை எப்படியாவது கொல்ல வேண்டும் என அவரும் கங்கனம் கட்டுகிறார்.
இந்த நேரத்தில் நரேன் குடும்பத்திற்கு ஆவாத ஒருவர் விமலை கொல்ல, பகையாளியிடமே வர விமலுக்கு ஸ்கெட்ச் போட, விமல் ஒரு நாள் தன் காதலியை சந்திக்க போகும் போது கொல்ல வர, எல்லோரையும் விமல் அடித்து தும்சம் செய்ய, எதிர்பாரத விதமாக விமலுக்கு ஒரு துரோகம் நடக்கிறது, ஏன் இந்த துரோகம், விமல் இந்த எதிரிகளிடமிருந்து தப்பித்தாரா? அந்த துரோகத்துக்கு காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
விமல் நடிப்பிலும் நடனத்திலும் சண்டைக்காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சனஸ்கா கதாநாயகியாக சிறப்பாக நடித்துள்ளார்.
நரேன், மூர்த்தி, பாலசரவணன், முனிஷ்காந்த், நட்டி என இதில் நடித்த அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
. டி.இமான் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
மாடுகள் அதை சுற்றி நடக்கும் சந்தோஷம், வன்மம், பழி வாங்கல் என இயக்குநர் கேநதிரன் சுவராஸ்யமாக சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.
மதிப்பெண் 2.5/5