Take a fresh look at your lifestyle.

காதல் ரீசெட் ரிப்பீட் திரைவிமர்சனம்

103

விஜய் இயக்கத்தில் மதுமகேஷ், அர்ஜுன் அசோகன்,ஜியா சங்கர், எம். எஸ். பாஸ்கர், விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்

கதை

ஜியா சங்கரை ஒருதலையாக காதலிக்கிறார் மதும்கேஷ், ஆனால் ஜியா சங்கரோ, அவரது நண்பர் அர்ஜூன் அசோகனை காதலிக்கிறார். இந்த சூழ்நிலையில் தான் காதலித்த அர்ஜுன் அசோகன் கெட்டவன் என தெரிந்து மலைமேலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ளுமபோது மது அவரை காப்பாற்றுகிறார். இந்த தற்கொலை சம்பவத்தால்
ஜியா சங்கர் மறதி நோய் ஏற்படுகிறது. அதாவது முந்தைய நாளில் என்ன நடந்தது? என்பது அடுத்த நாளில் மறந்து போகும் வியாதியில் சிக்கி அவதிப்பட்டு வருகிறார். அதாவது தூங்கி எழுந்தால் அனைத்துமே அவருக்கு மறந்துவிடும்.
இதனால் தான் யார் ? என்று தெரியாமல் தவித்து வரும் அவரிடம், புதிய காதலனாக அறிமுகமாகிறார் மதும்கேஷ். பல்வேறு பொய்களை சொல்லி அவருடன் காதலில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் பழைய காதலன் அர்ஜுன் அசோகன் நான்நான் உணாமையான காதலன் என நிரூபிக்க முயல அதன் பிறகு ஜியா சங்கரின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது? இறுதியில் என்ன ஆனது? என்பதே பரபரப்பான மடத்தின் மீதி கதை.

கதாநாயகன்களாக மதுமகேஷ் அர்ஜுன் அசோகன் இருவருமே சிறப்பாக நடித்துளளார்கள். புதிய வரவு ஜியா சங்கர் அழகாலும் நடிப்பாலும் நமாமை கவர்கிறார். ஜியா சங்கரின் தந்தையாக ஜெயப்பிரகாஷ், மதுமகேஷின் தாயாக விஜி சந்திரசேகர், மற்றும் ஏம். எஸ். பாஸ்கர் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்துசிறப்பாக நடித்துள்ளனர்.
அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஸ்காட்லாந்தை பதிவு செய்யும் காட்சிகள் எல்லாம் அழகு. ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் எல்லாம் சிறப்பு.

கான்செப்ட் அளவில் இருந்த சுவாரஸ்யம் திரைக்கதையிலும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இயக்குநர் விஜய்க்கு பாராட்டுக்கள்.

மதிப்பெண் 3/5