மனோ க்ரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L.R. சுந்தரபாண்டி இயக்கத்தில்,
ஆரி அர்ஜுனன், தீப்ஷிகா, பவித்ரா, தலைவாசல் விஜய், சுப்பிரமணியம் சிவா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஃபோர்த் ஃப்ளோர்.
கதை
வில்லன் சுபரமணியம் சிவா கட்டுபாட்டுக்குள் இருக்கும் நிறைய வீடுகள் இருக்கும் அபார்ட்மெண்ட்டுக்குள் கதாநாயகன் ஆரியும் சில யூ டியூப்ர்களும் தங்குகின்றனர். அங்கு சில அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக ஆரி உணர்கிறார். இந்த சூழ்நிலையில் தான் லிவ்விங்கில் வாழ்ந்து பிரிந்த காதலியும் இவர்களுக்கு பிறந்த குழந்தையும் காணாமல் போனது தெரிய வர போலிஸில் புகார் கொடுக்கிறார். இதன் பிறகு தன் காதலியையும் குழந்தையும் கண்டுபிடித்தாரா? இல்லையா? அந்த அபார்ட்மெண்ட்டுக்குள் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக ஆரி அர்ஜுனன் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். தீப்ஷிகா, பவித்ரா இவர்களின் நடிப்பும் அருமை. தலைவாசல் விஜய் நடிப்பும் அருமை. வில்லனாக சுப்ரமணியம் சிவா நடிப்பு மிரட்டல். ஜெ. லஷ்மண் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். தரண்குமாரின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
இயக்குநர் LR சுந்தரபாண்டி கிரைம் திரில்லர் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார். பாராட்டுக்கள்.