Take a fresh look at your lifestyle.

ராட்ட திரைவிமர்சனம்

109

சக்திவேல் நாகப்பன் இயக்கத்தில் சக்திவேல் நாகப்பன், ஹெலன் சித்தா தர்ஷன் சாப்லின் பாலு, சந்திரன், கிருஷ்ணன், முத்துராஜா, பம்பாய் சுப்ரமணி,கல்பனா, வசந்தி, ஜெயஸ்ரீ ,ரத்னா, செல்லம்மா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ராட்ட.

கதை

கதாநாயகன் சக்திவேல் நாகப்பனுக்கு கல்யாணம் ஆகததால் அவரது அம்மா சாமியிடம் வேண்டுகிறார் சீக்கிரமே பெண்கிடைத்து திருமணம் ஆகவேண்டும் என்று. கதாநாயகி ஹெலனுக்கும் திருமணம் ஆகாததால் அவரது அம்மாவும் அதே கோயில் சாமியை வேண்டுகிறார். அந்த கோயிலில ஹீரோ அம்மாவும் ஹீரோயின் அம்மாவும் நட்பாகின்றனர். ஹீரோ வேலை சேய்யும் தறி கம்பெணியில் ஹீரோயினும் வேலைக்கு சேர்வதோடு இவரது பக்கத்து வீடடுக்கும் குடி வருகிறார். இருவருக்குள்ளும் காதல் உருவாகி காதலிக்கின்றனர். இந்த சூழ்நிலையில்
தறி உரிமையாளர் சித்தா தர்ஷன் ஹீரோயின் ஹெலானாவை ஒன் சைடாக காதலித்து தன் காதலை ஹெலனாவிடம் நேரில் சொல்கிறார். ஹெலனா அந்த காதலை மறுத்து சக்திவேல் நிகபாபனை கல்யாணம் செய்து கொள்கிறார். திருமணமாகி சில மாதங்களில் கஷ்டம் ஏற்பட வாங்கிய கடனை அடைக்க தன் கணவனுக்காக சித்தா தர்ஷனிடம் வேலை கேட்கிறார். அவர் வேலை கொடுத்தாரா? அல்லது அவளுக்கு தொந்தரவு கோடுத்தாரா? என்பதை படத்தின் சுவாராஸ்யமான கதை.

கதநாயகனாக சக்திவேல் நாகப்பன் தறி ஓட்டுபவராக சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஹெலன் கொடுத்த கதாபாத்திரததை சிறப்பாக சேய்துள்ளார். சித்தா தர்ஷன் கதாபாத்திரம் புதுமை. அதை சிறப்பாக செய்துள்ளார்.
சாப்லின் பாலு, சந்திரன், கிருஷ்ணன், முத்துராஜா, பம்பாய் சுப்ரமணி,கல்பனா, வசந்தி, ஜெயஸ்ரீ ,ரத்னா, செல்லம்மா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

லோகேஷின் எடிட்டிங் ஷார்ப். வெற்றியின் ஒளிப்பதிவு படத்நிற்கு கூடுதல் பலம். மணி கிருஷ்ணன் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.

நிருவாகத் தயாரிப்பாளர்:

டாக்டர் மூதுரை பொய்யாமொழி
மக்கள் தொடர்பு விஜயமுரளி, கிளாமர் சத்யா.

எழுத்து , தயாரிப்பு ,இயக்கம் :- சக்திவேல் நாகப்பன். தறி நேசவாளரின் கதையை எல்லோரும் ரசிக்கும்படி உணர்வுப்பூர்வமாக சொல்லியுள்ளார். பாராட்டுக்கள்.