Take a fresh look at your lifestyle.

“காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு: ஜனவரியில் திரையரங்குகளை ஆட்கொள்ளப் போகும் மௌனம் !!

7

சத்தமாய் பேசும் திரையுலகில் மௌனத்தைத் துணிச்சலுடன் தேர்ந்தெடுத்த Zee Studios “காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு !

அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், “காந்தி டாக்ஸ்” படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது. ஒரு வசனம் கூட இல்லாமல், முழுக்க முழுக்க மௌனம், உணர்வு மற்றும் தாக்கம் கொண்ட காட்சிகள் மூலம் பார்வையாளரை கட்டிப் போடும், ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த டீசர் உருவாகியுள்ளது.

வார்த்தைகள் இல்லாத போதிலும், இந்த டீசர் நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது. தீவிரமான காட்சிகளும், மௌன இடைவெளிகளும், நம்முள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, “காந்தி உண்மையில் என்ன பேசப் போகிறார்?” என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. சொல்லப்படாத விஷயங்களின் பாரம் மௌனத்தின் மூலம் வலுவாக உணர்த்தப்படுகிறது.

நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகிய அபூர்வமான நடிகர் குழு வார்த்தைகள் இன்றியே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறமையை டீசரில் நிரூபித்துள்ளனர்.

கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், இப்படத்திற்கு, இசை ஜாம்பவான் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசையே கதையின் குரலாக மாறி, ஒவ்வொரு மௌனத்தையும், பதற்றத்தையும், சொல்லப்படாத எண்ணங்களையும் உணர்ச்சிபூர்வமாக உயர்த்துகிறது.

Zee Studios வழங்க, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரிக்கும் காந்தி டாக்ஸ், திரை மொழியின் வழக்கமான விதிகளை உடைக்கும், மௌனத்தை ஒரு சக்திவாய்ந்த கதையாக்கமாக மாற்றும் வித்தியாசமான திரையரங்கு அனுபவமாக இருக்கும்.

2026 ஜனவரி 30 அன்று “காந்தி டாக்ஸ்” திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

youtu.be/Dv3qq4-TSv8