Take a fresh look at your lifestyle.

“மாண்புமிகு பறை” – திரைவிமர்சனம்

52

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் லியோ சிவக்குமார், காயத்ரி சேரன்ராஜ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் “மாண்புமிகு பறை”

கதை

சாமிக்கும் சாவுக்கும் பறை அடிக்கமாட்டோம் என்று சொல்லும் கதாநாயகன் லியோ சிவக்குமார். இதனால் சேரன்ராஜ் தம்பியிடம் தகறாறு ஏற்பட்டு அடித்து சட்டையை கிழித்துவிடுகிறார். இதனால் அடிவாங்கிய சேரன்ராஜ் தம்பி இனி நீங்க எப்படி வாழ்வீங்க என்று சவால் விடுகிறார். சவால் விட்டபடி சிவாவும் அவரது நண்பரும் சாகடிக்கபபடுகின்றனர். அவர்களை கொன்றது யார்? முடிவில் சிவாவின் மனைவி காயத்ரி என்ன முடிவெடுத்தாள் என்பதே படத்தின் மீதிக்கதை

கதாநாயகனாக லயோனி மகன் லியோ சிவக்குமார் நடிப்பிலும் சண்டைக்காட்சியிலும், நடனத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். லியோ சிவக்குமாரின் மனைவியாக காயத்ரி சிறப்பாக நடித்துள்ளார். சிவா நண்பராக ஆர்யன் நடிப்பும் அருமை. ரமா, கஜராஜ், சேரன்ராஜ், சுகுமார் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாததிரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
தேவாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவும் அருமை.

இயக்குநர் எஸ். விஜய் சுகுமார்
பறை இசையின் அடையாளத்தை கதையாக கொண்டு எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார். பாராட்டுக்கள்.