*கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட அனுபமா பரமேஸ்வரனின் ‘லாக்டவுன் ‘ திரைப்படத்திற்கு குவியும் வாழ்த்துகள்*
லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஷ்கரன் தயாரிப்பில், ஜி கே எம் தமிழ்குமரன் தலைமையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லாக் டவுன்’ திரைப்படம் – கோவாவில் நடைபெறும் 56 வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு சர்வதேச திரை ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தென்னிந்திய சினிமாவில் கோலோச்சும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் “லாக்டவுன்” திரைப்படத்தை தயாரித்து வழங்கவுள்ளது.
அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாக் டவுன்’ திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பாளராக சாபு ஜோசப், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன் – சித்தார்த் விபின் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். லாக் டவுன் காலகட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட உணர்வு மற்றும் உளவியல் ரீதியிலான தாக்கங்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி கே எம் தமிழ்குமரன் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் திரு.சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கும் நிலையில்.. தற்போது கோவாவில் நடைபெற்று வரும் 56 ஆவது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சர்வதேச பார்வையாளர்களுக்கான பிரத்யேக திரையிடலில் ‘லாக் டவுன்’ திரையிடப்பட்டது. அந்த அரங்கம் முழுவதும் பார்வையாளர்களால் நிரம்பி இருந்தது. இப்படத்தை பார்வையிட்ட சர்வதேச பார்வையாளர்கள்- விருந்தினர்கள்- விழா குழுவினர்- திரை ஆர்வலர்கள்- என அனைவரும் படத்திற்கும், படக்குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்தனர். இதற்கு படக்குழுவினர் தங்களது நன்றியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மேலும் இத்திரைப்படம் வரும் டிசம்பர் 05 இல் திரையரங்கில் வெளியாகவுள்ளது.