Take a fresh look at your lifestyle.

*ஆர்ட்அப்டிரையாங்கில்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான, தமிழ் மொழி திரைப்படமான ‘கெவி’ 98வது( ஆஸ்கார் ) அகாடமி விருதுகளுக்கான பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது!*

4

*ஆர்ட்அப்டிரையாங்கில்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான, தமிழ் மொழி திரைப்படமான ‘கெவி’ 98வது( ஆஸ்கார் ) அகாடமி விருதுகளுக்கான பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது!*

தமிழ் தயாளன் இயக்கத்தில் வெளியான ‘கெவி’ திரைப்படம் கொடைக்கானல் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நீதி மற்றும் தங்கள் வாழ்விற்காகப் போராடும் தம்பதியினரான மந்தாரை மற்றும் மலையன் ஆகியோரின் கதையைச் சொல்கிறது. இந்தப் படம் காதல், எதிர்ப்பு மற்றும் துன்பங்களுக்கு எதிரான சமூகத்தின் போராட்டத்தை மையமாகக் கொண்டது.

ஜூலை 18, 2025 அன்று வெளியான இந்தப் படத்தில் ஷீலா, ஜாக்குலின் லிடியா, மற்றும் ஆதவன். எம் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அதன் கதைசொல்லல் மற்றும் நடிகர்களின் திறமையான நடிப்பிற்காகவும் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் இருந்து நேர்மறையான பாராட்டுகளைப் பெற்றது.