இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும்படம் காந்தா.
கதை
தான் தயாரிப்பு நிறுவனத்தை காப்பாற்றிக்கொள்ள பெரிய தயாரிப்பாளர்
இயக்குநர் சமுத்திரக்கனியிடம் நம்பர் ஒன் ஹீரோவான துல்கர்சல்மானை வைத்து ஓரு படம் இயக்கி தர சொல்கிறார். முதலில் மறுத்து பின் சம்மதிக்கிறார். தன் தாயின் கதையான சாந்தாவை எடுக்க நினைக்க துல்கர் சல்மான் அதை தனது ஹீரோ மாஸ்க்கு தகுந்த மாதிரி காந்தாவாக எடுக்க நினைக்கிறார். இதனால் சமுத்திரகனிக்கும் துல்கர்சல்மானுக்கும் ஈகோவாகிறது. அதன் பிறகு படம் சாந்தாவாக உருவாகி வெளிவந்ததா? துல்கர் நினைத்தபடி காந்தாவாக வந்ததா? என்பதே படத்தின் சுவாராஸ்யமான படத்தின் மீதிக்கதை.
துல்கர் சல்மான், தொழில் மீது தீவிர கவனம் கொண்ட ‘டிகே மகாதேவன்’ கதாபாத்திரத்தில் அசத்தலான, உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார்.
சமுத்திரக்கனி நடிப்பில் மிரட்டியுள்ளார்.
ராணா டகுபதி விசாரணை அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார்.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை, டேனியல் சான்செஸ்-லோபஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் சினிமா பேக்ட்ராப்புடன் காதல், கொலை சம்பவங்களை கொண்டு காதல் கிரைம் திரில்லர் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லி வெற்றிபடமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.