Take a fresh look at your lifestyle.

*டிஸ்னியின் ‘ஜூடோபியா 2’ படத்தில் தைரியமான காவல்துறை அதிகாரி ஜூடி ஹாப்ஸிக்கு இந்தியில் குரல் கொடுத்திருக்கிறார் நடிகை ஷ்ரதா கபூர்!*

9

டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நவம்பர் 28 அன்று வெளியாகும் ‘ஜூடோபியா 2’ படத்தின் இந்தி வெர்ஷன் அறிவிப்புக்காக நடைபெற்ற பத்திரிகையாளர் சிறப்பு சந்திப்பில், தைரியமான காவல்துறை அதிகாரியான ஜூடி ஹாப்ஸூக்கு இந்தியில் குரல் கொடுத்தது பற்றிய தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார் நடிகை ஷ்ரதா கபூர்.

இந்த சந்திப்பில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை தான் ஆழமாக உள்வாங்கிக் கொண்டது பற்றி ஷ்ரதா பேசினார், “ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்திற்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவள் தன் நிலையில் உறுதியாக இருந்ததை நிச்சயமாக என்னால் புரிந்துகொள்ள முடியும். அவள் அதிகாரம் மிக்கவள், தேவைப்படும் தருணத்தில் மென்மையாகவும் இருப்பாள். ஜூடியாக இருந்தது மகிழ்ச்சி!”

மேலும் ஒரு அனிமேஷன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் கிரியேட்டிவ் புராசெஸ் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, “அனிமேஷன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தது மிகவும் வித்தியாசமான அனுபவம். வேடிக்கையாகவும் கூலாகவும் இருக்கும் கதாபாத்திரத்திற்கு நான் குரல் கொடுத்தது சுவாரஸ்யமாக இருந்தது. அவளுக்குப் பொருந்தும்படி என் குரலை மாற்றியமைக்க வேண்டியிருந்தது. அவள் கோபம், வேடிக்கை என எல்லாவற்றையும் கவனித்து அதற்கேற்ப குரல் கொடுத்தேன். நீங்கள் உண்மையிலேயே அந்தக் கதாபாத்திரத்தின் குரலாக இருக்க வேண்டும்” என்றார்.

இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக திரையிடல் இருந்தது. அங்கு ஷ்ரத்தா கபூர் ஜூடி ஹாப்ஸின் ஆளுமையை, ஆற்றலை, விடாமுயற்சியை தன் குரல் வழியே முழுமையாக வெளிப்படுத்தியதை பத்திரிகையாளர்கள் கண்டனர்.

‘ஜூடோபியோ 2’ நவம்பர் 28 ஆம் தேதி இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.