Take a fresh look at your lifestyle.

ஜுலை 12 கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் படத்தின் தலைப்பு வெளியிடு! படத்தை கோலி சோடா புகழ் இயக்குனர் விஜய்மில்டன் இயக்கியுள்ளார்!

206

விஜய் மில்டன் இயக்கி, 2014-ம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் `கோலி சோடா’. `பசங்க’ படத்தில் நடித்த கிஷோர், ஶ்ரீராம் மற்றும் பாண்டி ஆகியோருடன் சுஜாதா, இமான் அண்ணாச்சி இணைந்து நடித்த இந்தப் படத்துக்கு வசனம் எழுதினார் இயக்குநர் `பசங்க’ பாண்டிராஜ். 2006 -ல் `அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படத்தை இயக்கிவிட்டு, கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு, தனது இரண்டாவது படமான `கோலிசோடா’வை இயக்கினார் விஜய்மில்டன். அது கொடுத்த வெற்றியின் ஊக்கத்தில், விக்ரம், சமந்தா ஆகியோர் நடிக்க `பத்து எண்றதுக்குள்ள’ படத்தை இயக்கினார். அது மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் போக, பரத் மற்றும் ராஜகுமாரன் நடிக்க `கடுகு’ திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் மக்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்போது கன்னடத் திரை உலகத்திற்குள் நுழைந்துள்ளார் விஜய்மில்டன்.

இவர் இயக்கும் இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார். அஞ்ச்லி நாயகியாக நடிக்கிறார்.

சமீபத்தில் சிவராஜ்குமார் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “டகரு” ( Tagaru ) . இதில் வில்லனாக நடித்து மக்களிடம் பரபரப்பாக பேசபட்டவர் டாலி தனஞ்ஜெயா. இந்த இருவரும் மீண்டும் சேர்ந்து எப்பொழுது நடிப்பார்கள் என்ற எதிபார்ப்பு மக்களிடம் அதிகமாக இருந்தது. அதனால், இருவரையும் சேர்த்து நடிக்க வைக்க பல பேர் முயர்ச்சித்தார்கள்.டைரக்டர் விஜய்மில்டன் சொன்ன கதை பிடித்து போக மீண்டும் சிவராஜ்குமார் – டாலி தனஞ்ஜெயா (  dolly dhananjeya ) இப்படம் மூலம் ஒன்றாக இணைகிறார்கள். இதை கேள்விபட்ட கன்னட திரை உலகில் இப்போதே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. வரும் ஜுலை 12ம் தேதி சிவராஜ்குமார் பிறந்தநாள். அன்று இப்படத்தின் தலைப்பை அறிவிக்க உள்ளார் விஜய்மில்டன்.

ஒளிப்பதிவாளர், இயக்குனரையும் தாண்டி விஜய்மில்டன் மிகச்சிறந்த கவிஞர் .

இவர் எழுதிய “கொலுசுகள் பேசக்கூடும்” எனும் காதல் கவிதைகள் அடங்கிய தொகுப்பு, 20 வருடங்களுக்கு முன் மிக பிரபலம் பல பதிப்புகளை தாண்டி அத்தொகுப்பு இப்போதும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்றால் அது மிகையாகாது!