Wayfarer Films தயாரிப்பில் இயக்குனர் டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சந்து சலீம்குமார், அருண் குரியன், சாண்டி, டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும்
’லோகா – அத்தியாயம் 1 : சந்திரா’ இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
அதீத சக்திகள் கொண்ட நாயகி கல்யாணி பிரியதர்ஷன் ஸ்வீடனில் எதிரிகளுடன் ஏற்படும் மோதலில் இருந்து உயிர் பிழைத்து பெங்களூர் நகரத்திற்கு வருகிறார். அங்குள்ள ஒரு காபி ஷாப்பில் இரவு நேர வேலையில் சேர அங்கிருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்.
கல்யாணி பிரியதர்ஷன் வசிக்கும் வீட்டிற்கு எதிரே இருக்கும் நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோர் கல்யாணியுடன் நட்பாக பேசி பழகி வருகிறார்கள். அதே சமயம், 3 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் மனிதர்களை கடத்தி அவர்களது உடல் உறுப்புகளை திருடி வர இதனால் பெங்களூரில் பரபரப்பு ஏற்படுகிறது. அந்த கும்பலுடன் போலீஸ் இன்ஸ்பெக்டரான சாண்டிக்கும் தொடர்பு இருக்கிறது.
ஒரு நாள் இரவு நேரத்தில் கல்யாணி பிரியதர்ஷனை அந்த உடல் உறுப்பு திருடும் கும்பல் ஆட்டோவில் கடத்தி ஊருக்கு ஒதுக்கு புறத்தில் உள்ள தொழில் சாலைக்கு கொண்டு செல்ல அந்த கும்பலில் இரண்டு பேரை கல்யாணி கொன்று விட ஒருவன் மட்டும் தப்பித்து சென்று விடுகிறான்.
அந்த கும்பலுடன் தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரான சாண்டியுடன், கல்யாணி பிரியர்தர்ஷன் மோத வேண்டிய சுழ்நிலை ஏற்படுகிறது.
அதீத சக்திகள் கொண்ட நாயகி கல்யாணி பிரியதர்ஷனுக்கு உதவி செய்தது யார்? எதற்காக ? என்பதை சொல்லும் படம்தான் ’லோகா – அத்தியாயம் 1 : சந்திரா’
சிறப்பு தோற்றத்தில் வரும் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.