இன்று சென்னை நாள் கொண்டாட்டம் சென்னையின் இலக்கிய அடையாளங்களில் ஒன்றான டிஸ்கவரி புக் பேலஸில் சிறப்பாக தொடங்கியது.
சென்னையை மையமாகக் கொண்ட நூல்கள் மற்றும் புகைப்படக் காட்சியை சென்னை விருகம்பாக்கம் தொகுதி MLA திரு.பிரபாகர் ராஜா தொடங்கி வைத்தார். டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வேடியப்பன், 99கி.மீ காஃபி ஷாப் உரிமையாளர் திரு.மனோ சாலமன் மற்றும் பத்திரிகையாளர் பொன்ஸீ ஆகியோர் பலரும் கலந்துகொண்டனர்.
சென்னையை மையமாகக் கொண்ட
நூற்றுக்கணக்கான நூல்களுடன், ஆவணப்படம் திரையிடல், கலந்துரையாடல் மற்றும் புகைப்படக் காட்சி அனைவரையும் கூடுதல் கவனம் பெற வைக்கிறது.
இந்த சென்னை நாள் விழா அடுத்த மூன்றுநாள் வரை தொடரும் என அறிவிக்கப்படுகிறது.