Upbeat Pictures சார்பில், தயாரிப்பாளர் VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில் தர்ஷன், லால், சுஜித், முனீஷ்காந்த், பாடினி குமார், ஆரோல், ரம்யா ராமகிருஷ்ணன், சுந்தரேஸ்வரன், கெளஷிக் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’சரண்டர்’
சென்னையில் தேர்தல் சில நாட்களில் நடை பெறுவதால் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கும்படி செய்தி வர நடிகர் மன்சூர் அலிகான் தனது துப்பாக்கியை திருமழிசை காவல் நிலையத்தில் ஏட்டாக இருக்கும் லாலிடம் ஒப்படைக்கிறார். இதே காவல் நிலையத்திற்கு ட்ரைனிங் எஸ் ஐ யாக வருகிறார் நாயகன் தர்சன்
மறுபக்கம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சிப் பணத்தை பட்டுவாடா செய்ய 10 கோடியை ஒருவரிடம் கொடுத்தனுப்பகிறார் பிரபல ரெளடியான சுஜித். செல்லும் வழியில் பணம் கொண்டு சென்ற நபர் கார் விபத்தில் சிக்க, பணம் தொலைந்து விடுகிறது. பணத்தைத் தேடி அலைகின்றனர் சுஜீத்
இந்நேரத்தில் சுஜித்தின் தம்பியாக வரும் கெளஷிக் குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வர அதை தட்டி கேட்டுக்கிறார் போலீஸ் லால்.
குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த கெளஷிக்கை லால் கேட்டதால் சுஜித்தின் பகையை சம்பாதித்துக் கொள்கிறார் லால்.