Take a fresh look at your lifestyle.

’மகா அவதார் நரசிம்மா’ – விமர்சனம்

196

விஷ்ணுவின் தீவிர பக்தரான சிறுவன் பிரகலாதனின் கதையும், பிரகலாதனின் பக்தியால் பரவசமடைந்த விஷ்ணு, நரசிம்மர் அவதாரம் எடுத்து அசுரன் இரன்யகசுபுவை அழித்ததும் தான் ’மகா அவதார் நரசிம்மா’

தெரிந்த கதை என்றாலும், அதை தற்போஒதைய தலைமுறையினர் தெரிந்துக்கொள்ள வேண்டிய நோக்கத்துடனும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து மகிழும்படியான அனிமேஷன் திரைப்படமாக கொடுத்திருக்கிறார்கள்.

 பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகளுக்கான படமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புராண கதைகளை குழந்தைகள் ரசிக்கும்படி  குறிப்பாக அனிமேஷனையும்,  கிளைமாக்ஸில் நரசிம்ம அவதாரமும், அவர் அசுரனை அழிப்பதும் அந்த காட்சிகள்   ரசிகர்கள் பார்க்கும்போது  கை தட்டல் பெறுகிறது .

வசன உச்சரிப்பு, இசை, காட்சியமைப்பு என அனைத்தையும் சரியாக கையாண்டு சிறந்த புராண அனிமேஷன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள் பட குழுவினர் . 
பிரகலாதன் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களை இதில் முற்றிலும் மாறுபட்ட வடிவத்திலும், பிரமாண்டமாகவும் படமாக்கியிருறார்கள் 

 

ரேட்டிங் – 3  / 5