Take a fresh look at your lifestyle.

’மாரீசன்’ – விமர்சனம்

91

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு , பகத் பாசில், கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மாரீசன்’

பாளையங் கோட்டை சிறையில் இருந்து வெளியே வரும் திருடரான பகத் பாசில் நாகர்கோவிலில் உள்ள ஒரு வீட்டுக்கு திருடப்  போகிறார்.

அங்கு வடிவேலு சங்கிலியால் கட்டிப் போடப்பட்டு இருப்பதைப் பார்க்கிறார். தனக்கு முதுமையால் ஏற்படும் நினைவிழப்பு நோய் (அல்சைமர் ) இருப்பதாகவும் அதனால் மகன் கட்டிப் போட்டு விட்டுப் போய் இருப்பதாகவும் அவிழ்த்து விட்டு வெளியே அழைத்துப் போனால் இருபத்தைந்து ஆயிரம் பணம் தருவதாக கூறுகிறார்.

இதனையடுத்து வடிவேலு ஏ.டி.எம்-ல் இருந்து 25 ஆயிரம் ரூபாய் எடுத்து பகத் பாசிலிடம் கொடுக்கிறார், வடிவேல் அக்கவுண்டில் 25 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் இருப்பதை பார்க்கும் பகத் பாசில் அந்த மொத்த பணத்தையும் திருட நினைக்கிறார். அதற்காக வடிவேலுடனே பயணிக்கிறார்.

இதனையடுத்து திருவண்ணாமலையில் உள்ள உறவினர் லிவிங்ஸ்டனை பார்க்க வடிவேலு ஆசைப்பட பகத்பாசில் அங்கு அழைத்து செல்கிறார். இதே வேளையில் 3 நபர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். போலீஸ் அதிகாரியான கோவை சரளா தலைமையிலான குழு தேடுதல் வேட்டையில் இறங்குகிறது.

கொலைகளை செய்த குற்றவாளி யார் என தெரியாமல் போலீசார் தேடும் நேரத்தில் ஆசிரியர் ஒருவரை சுத்தியால் அடித்து கொலை செய்கிறார் வடிவேலு. 

ஒரு கட்டத்தில் வடிவேலுக்கு ஞாபக மறதி  நோய் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார் பகத் பாசில்.  
முடிவில் வடிவேலு ஆசிரியரை எதற்காக கொலை செய்தார் ?
ஏற்கனவே நடந்த கொலைகளுக்கும் வடிவேலுவுக்கும் தொடர்பு உள்ளதா ?
வடிவேலுவிடம் இருந்து 25 லட்ச ரூபாயை பகத் பாசில் கொள்ளை அடித்தாரா? இல்லையா?  என்பதை சொல்லும் படம்தான்  ’மாரீசன்’ 
வேலாயுதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு இயல்பான நடிப்பில் மனைவி சித்தாரா மீது வைத்திருக்கும் பாசம், மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்க்காக பழி தீர்க்கும்போது ஆவேசமாக நடிப்பிலும்  , ஞாபக மறதி  நோய்  உள்ளவராக  என இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .
தயாளன் என்ற கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் பகத் பாசில் துறுதுறு நடிப்பின் முலம் சிரிக்க மற்றும் ரசிக்க வைத்திருக்கிறார். 
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.  
கலைச்செல்வன் சிவாஜி,  இருவரது ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் .
விவேக் பிரசன்னா ,ரேணுகா ,கோவை சரளா ,சித்தாரா மற்றும் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .

பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சுதீஷ் சங்கர்

காமெடி , கொலை, சஸ்பென்ஸ் என  விறுவிறுப்பான திரைக்கதையுடன் படத்தை இயக்கியுள்ளார் .

ரேட்டிங் – 3  /  5