ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா , நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’டி என் ஏ’
காதல் தோல்வியால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார் நாயகன் அதர்வா ஒரு கட்டத்தில் இவரால் குடும்பத்தில் ஒரு பிரச்சனை வருகிறது. இதனையடுத்து அதர்வாவை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கிறார்கள்.
மறுபக்கம் சற்றே மனநிலை பிரச்னை உடைய நாயகி நிமிஷா சஜயனுக்கு சரியாக திருமண வரன் அமையாமல் இருக்கிறது. போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து குணமாகி வீடு திரும்புகிறார் அதர்வா
இந்நிலையில் அதர்வா – நிமிஷா சஜயனுக்கு இரு குடும்பத்தார்கள் சேர்ந்து திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு இவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது.
குழந்தையை கடத்தியதற்கு என்ன காரணம் என்பதை சொல்லும் படம்தான் ’டி என் ஏ’
நாயகனாக நடித்திருக்கும் அதர்வா இயல்பான நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார். மது போதைக்கு அடிமையானவராகவும், மனைவி மீது வைத்திருக்கும் பாசம் , குழந்தையை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சி, அதிரடி ஆக் க்ஷன் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டை பெறுகிறார்.
நண்பராக வரும் ரமேஷ் திலக், போலீசாக வரும் பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், மருத்துவராக வரும் ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.