நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க எஸ் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’
தமிழ் சினிமா திரையரங்கில் வெளியாகும்போது யூடியூப்பில் அந்த படத்தின் நெகடிவாக சினிமா விமர்சனம் செய்யபவர்களை நகரின் ஒதுக்குப்புறமாக இருக்கும் திரையரங்கிற்கு அழைத்து பேயாக இருக்கும் செல்வராகவன் கொலை செய்து வருகிறார்
இந்நிலையில் யூடியுப் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் சந்தானத்திற்கு ஒரு திரைப்படத்தின் சிறப்பு காட்சி குடும்பத்தோடு பார்க்க அழைப்பு வருகிறது.
அழைப்பின் பேரில் அந்த தியேட்டருக்கு செல்லும் சந்தானத்திற்கு மட்டும் பாழடைந்த தியேட்டராக தெரிகிறது .