Take a fresh look at your lifestyle.

’ஹிட் – தி தேர்ட் கேஸ்’ – விமர்சனம்

128

வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி, சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவு ரமேஷ், சமுத்திரக்கனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஹிட் – தி தேர்ட் கேஸ்’

சமுத்திரக்கனியின் மகனான நாயகன் நானி கம்பிரமான ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி ஒரு கட்டத்தில் நானி ஜம்மு காஷ்மீரில் இருந்து ஆந்திராவுக்கு இடம் மாற்றம் செய்யப்படுகிறார்.

இங்கு பொறுப்பேற்ற நேரத்தில் பல கொடூர கொலைகள் குறித்த வழக்கு வருகிறது. இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்ளும் போது இந்த வழக்குகள் பின்னணியில் மர்மமான ஒரு கருப்பு உலகம் இருப்பதை நானி அறிந்து அவர்களை தேடி செல்கிறார்.

முடிவில் நானி இந்த கொலைகளுக்கு காரணம் யார் ?என்பதை கண்டுபிடித்தாரா?  கருப்பு உலகத்தின் தலைவனை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே ’ஹிட் – தி தேர்ட் கேஸ்’ படத்தின் மீதிக்கதை.

அர்ஜுன் சர்க்கார் என்ற கதாபாத்திரத்தில் கம்பீரமான  காக்கி சாட்டை போடாத காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நானிஅதிரடி நாயகனாக சண்டைக்காட்சிகளில் ரசிகர்களுக்கு ஆக்க்ஷன் விருந்து படைக்கிறார் .

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீரிநிதி ஷெட்டி கதைகேற்றபடி இயல்பாக நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் . 
சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், சமுத்திரகனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர், அமித் சர்மா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்கின்றனர் . 
ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவும்  
இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம் .
கிரைம் சஸ்பென்ஸ் திரில்லரை கதையாக கொண்டு ஆக்‌ஷனுடன் அதிகமான வன்முறை காட்சிகள் இருந்தாலும் கதையோடு பயணிக்கும்போது படம் பார்க்கும் ரசிகர்களே ஏற்று கொள்ளும்படியான திரைக்கதை அமைப்பில்  கமர்ஷியல் ஆக்க்ஷன் படத்தை உருவாக்கியுள்ளார் சைலேஷ் கொலானு   
ரேட்டிங் –   3.5  /  5