Take a fresh look at your lifestyle.

’வீர தீர சூரன் – பாகம் 2’  – விமர்சனம்

64

 

மதுரை அருகே உள்ள கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் விக்ரம் இவரது மனைவி துஷாரா விஜயன்  இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். இதற்கு முன்பு சம்பவம் ஒன்று செய்ய இனிமேல் அது போன்ற வேலைகளை செய்ய கூடாது என்று முடிவெடுத்து  தாதாகளான மாருதி பிரகாஷ்ராஜ்  மற்றும் அவரது மகன் சுராஜ் வெஞ்சரமூடுவை   விட்டு விலகி இருக்கிறார்.

இந்நிலையில் மனைவி மற்றும் மகளை காணவில்லை என ஒருவர் போலீசில்  ஒருவர் புகார் கொடுக்கிறார். இந்த வழக்கை கையில் எடுக்கும் போலீஸ் அதிகாரி எஸ் பி எஸ் ஜே சூர்யா முன் பகை காரணத்திற்காக ரவுடியான பெரியவர் மற்றும் அவர் மகன் சுராஜ் வெஞ்சரமுடு ஆகியோரை சுட்டுக்கொல்லத் திட்டமிடுகிறார்

இதனையடுத்து விக்ரமின் உதவியை பெரியவர்  நாடுகிறார். அனைத்தையும் விட்டுவிட்டு குடும்பம், பிள்ளைகள் என வாழ்ந்துக் கொண்டிருக்கும் விக்ரம் முதலில் மறுத்தாலும், குடும்பத்தை காரணம் காட்டி மிரட்டுவதால் அவர்களை காப்பாற்ற சம்மதித்து களத்தில் இறங்குகிறார்.

இறுதியில் எஸ் ஜே சூர்யா  தாதாகளான மாருதி பிரகாஷ்ராஜ்  மற்றும் அவரது மகன் சுராஜ் வெஞ்சரமூடுவை   என்கவுண்டர் செய்தாரா? இல்லையா?

விக்ரம் பெரியவர் குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா?

என்பதை சொல்லும் படம்தான்  ’வீர தீர சூரன் – பாகம் 2’

காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம் மிரட்டலான நடிப்பில்  குடும்பத்தின் மீது காட்டும் பாசம்,  குடும்பத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லும் நிலையை வெளிக்காட்டிய விதம், பயம், கோபம், தவிப்பு என அனைத்து உணர்வுகளையும் இயல்பான நடிப்பில் வெளிபடுத்தி ஆக்க்ஷனில் அதிரடி நாயகனாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார் .

கதைகேற்றபடி மிக சிறப்பான நடிப்பில் விக்ரமின் மனைவியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன்,  

திரைக்கதைக்கு பக்க பலமாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா,  

முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் மாருதி பிரகாஷ்ராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு, பாலாஜி, ரமேஷ் இந்திரா, மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர் 

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை, பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். 

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், இரவுக் காட்சிகளில் கையாண்டிருக்கும் லைட்டிங் பிரமிக்க வைக்கிறது. ஒரு இரவில் பல சம்பவங்கள் நடந்தாலும், அவற்றை மிக நேர்த்தியாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு இரவில் நடக்கும் கதையை விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ் யூ அருண்குமார் இத்திரைப் படத்தை நாயகன், வில்லன்,போலீஸ் இவர்களுக்குள் நடக்கும் ஆடு புலி ஆட்டத்தை மிக நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார்

மொத்தத்தில் ’வீர தீர சூரன் – பாகம் 2’ – அதிரடி திருவிழா

ரேட்டிங் –  3 / 5