திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு கர்ப்பமடையும் சாந்தினிக்கு, ஒரு மர்ம போன் கால் மூலம் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா தனது கணவர் விவேக் பிரசன்னா இல்லை, என்ற உண்மை தெரிய வருவதோடு, அதே போன் கால் மூலம் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ அனுப்பப்பட்டு மிரட்டப்படுகிறார்.
ஆட்டோ ஓட்டுநரின் மகளான பூர்ணிமா ரவி, தன் காதலன் பிரதோஷினால் கர்ப்பமடைந்து ஏமாற்றப்படுவதோடு, பிரதோஷின்உண்மையான பின்னணி பற்றி தெரிந்து கொண்டு அவருடன் வாழவே கூடாது, என்ற முடிவுக்கு வருகிறார்.
இதே நேரத்தில் கார் மெக்கானிக்கான ஈஸ்வர், அவருடைய நண்பர் மூலம் கார் திருடி விற்று வருகிறார்.
கர்ப்பமாக இருக்கும் சாந்தினி தமிழரசன் –விவேக் பிரசன்னா தம்பதியருக்கு குழந்தை பிறந்ததா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’ட்ராமா’